"விஜய்யால் அதிமுகவின் வாக்கு வங்கி தானாகவே சரிவதற்கு வாய்ப்பு"- புகழேந்தி

 
கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான்.  அவருக்கு அந்த உரிமை இல்லை என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகுதான் எங்க ஆட்டமே இருக்கு – புகழேந்தி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி, “2026-ல் 26 சீட் கூட அ.தி.மு.க. வெல்லுமா என தெரியவில்லை.. அடுத்துவரும் தேர்தலில் அதிமுக அசிங்கமான தோல்வி ஏற்பட்டால் தெருவில் கூட நடந்து போக முடியாது. தேமுதிகவுக்கு கிடைத்த இந்த 20 சதவீத ஓட்டு கூட விஜயகாந்த் மறைவால் விழுந்த அனுதாப ஓட்டு.. பிரேமலதாவால் இல்லை என மறுக்க முடியுமா..?

அண்ணாமலை அ.தி.மு.க.வை கிண்டல் பண்ற அளவுக்கு போய்டுச்சி. அதிமுகவில் அனைவரையும் சேர்த்து வைக்கிறேன் என சசிகலா ஏமாற்றிவருகிறார். பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைய  எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். அனைவரும் சேர்ந்து பேசும்போது எடப்பாடியே தலைவராக இருக்கட்டும் என்று சொல்லக்கூட வாய்ப்பு இருக்கிறது. கட்சியில் சேர்க்க முடியாதுன்னு எடப்பாடி பழனிசாமி எப்படி சொல்லலாம்? எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரம் இல்லை. ஏற்கனவே அதிமுக வாக்கு வங்கிகளை இழந்திருக்கிறோம். இதில் விஜய் வந்தால் அவர் 10 - 15 சதவிகித வாக்கு வங்கிகளை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு தலைவராக உருவெடுத்து வருவதற்கு முயற்சி செய்து வருகிறார். அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி தானாகவே சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றார்.