உதயநிதி பேசும்போது ரம்மி விளையாடும் உடன்பிறப்புகள்! வீடியோவுடன் அதிமுக விமர்சனம்
திரையரங்கில் 500 சீட்டுகளை காசு கொடுத்து நிரப்பிப் பழக்கப்பட்டவர்களுக்கு, பெருந்திடல் கூட்டமெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் என அதிமுக ஐடி பிரிவின் செயலாளராக ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஐடி பிரிவின் செயலாளராக ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாற்காலியில் வந்து அமர சொல்லி ,காலையில் இருந்து மைக்கில் கூவி கூவி அழைத்து பார்க்கிறார்கள் ,எவரும் வரவில்லை.. அது சரி,கூட்டம் இருந்தால் தானே வருவதற்கு…! ஏழரை மணிக்கு பேசுவதாக சொல்லப்பட்டு இருந்த மு.க.ஸ்டாலின், கூட்டம் இல்லாத காரணத்தால் ஆறு மணிக்கே பேச ஆரம்பித்து விட்டார் போல…! அஇஅதிமுக மாநாடு போல் நடத்துவதாக எண்ணி வாயில் முதல் மேடை வரை அனைத்தையும் காப்பி அடித்தும், கூட்டம் தான் கூடவில்லை! உதயநிதி ஸ்டாலின் திரைப்பட ரீல்களைப் போலவே இந்த அரசியல் ரீலும் Utter Flop!
நாற்காலியில் வந்து அமர சொல்லி ,காலையில் இருந்து மைக்கில் கூவி கூவி அழைத்து பார்க்கிறார்கள் ,எவரும் வரவில்லை..
— Raj Satyen (@satyenaiadmk) January 21, 2024
அது சரி,கூட்டம் இருந்தால் தானே வருவதற்கு…!
ஏழரை மணிக்கு பேசுவதாக சொல்லப்பட்டு இருந்த @mkstalin ,
கூட்டம் இல்லாத காரணத்தால் ஆறு மணிக்கே பேச ஆரம்பித்து விட்டார் போல…!… pic.twitter.com/5RKuxnYGdh
உதயநிதி பேசும்போது ரம்மி விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்… அது சரி! திரையரங்கில் 500 சீட்டுகளை காசு கொடுத்து நிரப்பிப் பழக்கப்பட்டவர்களுக்கு, பெருந்திடல் கூட்டமெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்! ஓடி ஓடி சென்று கிடைக்கும் பிரியாணியை விட , இருக்கும் இடத்தில் அன்போடு கிடைத்த புளியோதரையும் - சாம்பார் சாதமே மேல் என்று இன்று உடன் பிறப்புகள் உணர்ந்து இருப்பார்கள், இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த அனைவரும் என் மகன்தான் என்கிறார் மு.க.ஸ்டாலின், அப்படி என்றால் அதிலிருந்து ஒருவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுப்பாரா?? திமுக எவ்வளவு விளம்பரம் செய்தாலும் இதான் கள நிலவரம்! இதுவே நாளை பாராளுமன்றத் தேர்தலின் முடிவும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.