2026இல் திமுக ஆட்சியிழப்பது உறுதி- ஆர்.பி.உதயகுமார்
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்லாத முதல்வர் தற்போது எதற்கு சென்றுள்ளார்? ஜன்னி வந்து திரும்பிவிடுவார் என தஞ்சையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.

தஞ்சையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் பேசி கேட்ட உடன் தான் ஒன்றிய அரசு நிதியை விடுவித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை முதல்வர் கேட்பாரோ அல்லது கேட்கமாட்டாரோ? தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டால் 2026 தேர்தலில் திமுக ஆட்சியிழப்பது உறுதி. 2011 தேர்தலில் தொடர் மின்வெட்டு பிரச்சனையால் திமுக ஆட்சியை இழந்தது போன்று இப்போதும் நடக்கும். மக்கள் அதிமுக பக்கம் உள்ளனர். மீண்டும் ஆட்சியை பிடித்து ஈபிஎஸ் முதல்வராவார்" என்றார்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், “3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்லாத முதல்வர் தற்போது எதற்கு சென்றுள்ளார்? ஜன்னி வந்து திரும்பிவிடுவார்” என்று விமர்சனம் செய்தார்.


