மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம்- சசிகலா

 
சசிகலா பேட்டி சசிகலா பேட்டி

மே - 18 இலங்கை  முள்ளிவாய்க்கால் முற்றம்  இனப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு  நினைவேந்தலை முன்னிட்டு தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

sasikala

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சசிகலா, "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு பேராசிரியர்கள் இல்லை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லி, எம்-சாண்ட், மின் கட்டணம் உள்ளிட்டவற்றின்‌ உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்ந்தாலும் அதன் வருமானம் அரசாங்கத்திற்கு செல்வது கிடையாது.

தி.மு.க இன்னும் 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் என்ற என்ற எண்ணத்தில் உள்ளது. அதை முறியடிக்க நாங்கள் இருக்கிறோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம்" என்றார்