2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள்- செல்லூர் ராஜூ

 
 sellur raju

2026ல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள், "Wait and see" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். 2026-இல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள்” என்றார்.

சசிகலா சுற்றுப்பயணம், அதிமுக பிளவுகள், ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு,"Wait and see" என பதிலளித்தார்.