சங்கர் படம் போன்று விஜய் மாநாடு பிரமாண்டம்- செல்லூர் ராஜூ

 
ச்

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.   

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  இரவு 7.30 மணிக்கெல்லாம் மாநாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக நிறைவுபெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீராக இன்று (அக்.28) அதிகாலை 3 மணியாகிவிட்டது.  இந்த மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றிருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.  

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இயக்குநர் சங்கர் படம் போன்று விஜய் மாநாடு பிரமாண்டமாக இருந்தது. விஜய் பட ஓப்பனிங் போல தவெக மாநாடு சிறப்பாக இருந்தது. போகபோகத்தான் கட்சி செயல்பாடுகள் எல்லாம் தெரியும்... தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் அருமையாக பேசினார். கமல்ஹாசனை காட்டிலும் விஜய் சூப்பராக பேசினார். எனவே கமல்ஹாசன் மீது எனக்கு கோபம் இல்லை. கமல்ஹாசனின் இந்தியன் திரைப்படம் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும், முடிவில் ஒன்றுமில்லை என்பதால் பிளாப் ஆகிவிட்டது. அதுபோல விஜய் அல்ல” என்றார்..