“4 படங்கள் ஓடினாலே நான்தான் அடுத்த முதல்வருனு கிளம்பிடுறாங்க..” விஜய்யை விமர்சித்த செல்லூர் ராஜூ

 
செல்லூர் ராஜூ

மதுரை ஒபுளாபடித்துறை அருகே அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா மாபெரும் பொது கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைப்பெறுகிறது. இந்த கூட்டத்தில் திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

செல்லூர் ராஜூ

நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, “5000 வாட்ஸ் பல்பு முன்னாள் நின்று நடித்து திமுகவை உச்சத்துக்கு கொண்டு சொன்றவர் எம்ஜிஆர். இன்று எத்தனையோ உச்ச நடிகர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு எல்லாம் இல்லாத குணம் எம்ஜிஆருக்கு உண்டு. அள்ளி கொடுக்கும் வள்ளல் எம்ஜிஆர். அதிமுக உருவாக காரணம் கருணாநிதி தான். 4 படம் ஓடினாலே தான் தான் முதல்வர் என்று எண்ணும் இன்றைய நடிகர்கள் மத்தியில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தார் எம்ஜிஆர். திமுக கடனை ஜல்லி பைசா வாங்காமல் நடித்து கொடுத்தார் எம்ஜிஆர். அதை முரசொலிமாறனே  சொல்லி இருக்கிறார். நமக்கும் திமுகவுக்கும் பகை இன்று நேற்று அல்ல. திமுக தீய சக்தியை ஒழிக்கும் வரை அதிமுக‌ ஓயாது.


எம்ஜிஆரையே தூக்கி எறிந்தது திமுக. அதன்பின்னர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். விசிலடித்தான் குஞ்சு என்று சொன்னார்கள். அவர்களை எல்லாம் 13வருடம் வன வாசம் போக வைத்தார் எம்ஜிஆர். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தார். ஸ்டாலின் ஒரு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றதுண்டா? 5000கிலோ மீட்டருக்கு அப்பால் படுத்து கொண்டு ஜெயித்தார் எம்ஜிஆர். அவரை தொடர்ந்து சிங்க பெண்ணான ஜெயலலிதா அதிமுக தனித்து நின்று ஜெயித்தார். மு.க.ஸ்டாலினால் 2026ல் தனித்து நின்று ஜெயிக்க முடியுமா? அப்படி வெற்றி பெற்றால் ஆண் மகன் என்று ஒத்துக்கொள்கிறேன். மனித நேய மிக்க கட்சி அதிமுக. ஆட்சிக்கு  வந்ததும் நீட் தேர்வு ரத்து முதல் கையெழுத்து போடுவதாக சொன்னார்கள் ரத்து செய்தார்களா..?” எனக் கேள்வி எழுப்பினார்.