"செங்கோட்டையன் ஈபிஎஸ் - ஐ குறை சொல்லலையே"- செல்லூர் ராஜூ
அதிமுக கட்சியையோ, பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜு, “அதிமுகவை மட்டுமே விமர்சனங்கள் செய்கிறார்கள் பாராட்டு விழாவை விவசாய சங்கம் ஏற்பாடு செய்தது. விழாவில் எம்.ஜி ஆர் - ஜெயலலிதா படம் இல்லாதை விழா அமைப்பாளர்களிடம் செங்கோட்டையன் சுட்டி காட்டி உள்ளார். அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெ.,படம் இல்லை என செங்கோட்டையன் அமைப்பாளரிடம் தெரிவித்துள்ளார். திமுகவிடம் காசை வாங்கி கொண்டு ஊடகவியலாளர்கள் என சொல்லி கொண்டு சில நபர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறார்கள், இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செய்துள்ளது. அதிமுக கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சிகளுக்காக காசு கொடுத்து மக்கள் கூட்டம் கூட்டப்படுகின்றது. 100 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அத்திகடவு - அவினாசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார், எடப்பாடி பழனிச்சாமி முடித்து வைத்துள்ளார். 4 ஆண்டுகள் 3 மாதம் ஆட்சி செய்தாலும் மக்கள் மனதில் நிற்க்கும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார். செங்கோட்டையன் அதிமுகவையும், எடப்பாடி பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை. இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார். இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது” எனக் கூறினார்.


