"நான் ராணுவ வீரர்களை மதிக்கவில்லையா?"- செல்லூர் ராஜூ விளக்கம்
நேற்று ராணுவ வீரர்கள் குறித்து பேசிய பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லு ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒவ்வொரு இந்தியரும் பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களையும், தேவையான கருவிகளை கேட்டு வாங்கியது பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர்கள் தான். அதனை ராணுவத்திற்கு வாங்கி கொடுத்தது மத்திய அரசு. முதலில் பாராட்ட வேண்டியது பிரதமரையும் அமைச்சரையும் அதற்குள் ராணுவ வீரருக்கு பாராட்டு என திமுகவினர் நாடகமாடுகிறது. அர்த்தம் கெட்ட தனமாக திமுகவினர் ராணுவ வீரருக்கு பாராட்டு விழா என நாடகமாடி வருகிறது. ராணுவ வீரர்கள் என்ன எல்லைல சண்டையா போட்டாங்க?! எல்லாம் பாரத பிரதமர் மோடி & அமைச்சர்களோட ஐடியா! ராணுவ வீரர்களுக்கு எதுக்கு பாராட்டு?தொழில்நுட்பம் வாங்கிக்கொடுத்தது பாரத பிரதமர்” என்றார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லு ராஜு தனது எக்ஸ் தளத்தில், “இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசிய தாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் ,எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழது மதிக்கிரேன் !!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


