“தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

 
 sellur raju

வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

``சுதாரிச்சு அடிக்கணும்!'' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ் ஆர் கோபி இன்று   எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எஸ்.ஆர். கோபி ஒரு சிங்கம் போன்றவர். தேர்தல் காலங்களில் எங்களையே மூர்க்கமாக எதிர்த்துப் பணியாற்றியவர். மதுரையில் திமுகவிற்காக அரும்பாடுபட்ட இவரைப் போன்றவர்கள் இன்று அங்கே மதிக்கப்படுவதில்லை . மேலும், மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான். வரும் தேர்தலில் தென் மாவட்டங்கள் முழுவதையும் அதிமுக கைப்பற்றி எடப்பாடியார் மீண்டும் முதல்வராவது உறுதி. மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் , நாங்கள் யாரும் தங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, வரும் கட்சிகளை வரவேற்க தயாராக இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பிறகுதான் முழுமை அடையும் என்றும் தேர்தல் நடைபெறும் பத்து நாட்களுக்கு முன்பாக இறுதியாகும் எனவும் அவர் கூறினார்.