"தமிழகத்தில் வெயிலும், திமுக ஆட்சியும் கடுமையாக இருக்கிறது" - செல்லூர் ராஜூ விமர்சனம்!!

 
sellur raju

தமிழகத்தில் வெயிலும், திமுக ஆட்சியும் கடுமையாக இருக்கிறது என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கூறி,  அதிமுகவினர் அவரை அடித்து அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

sellur raju

 இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது, நோய் தொற்றை பரப்புதல், 5கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு என மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார்.   ஒட்டுமொத்தமாக ஜெயக்குமார் மீது தற்போது 3 வழக்குகள் பதியப் பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி  திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்று வருகிறது. 

tn


இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, "திமுக சொன்னது போல கொரோனா நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் இதுவரை கொடுக்கவில்லை. தமிழகத்தில் வெயிலும் கடுமையாக இருக்கிறது; திமுகவின் ஆட்சியும் கடுமையாக இருக்கிறது;  திமுகவின் அடக்குமுறைக்கு அதிமுக அஞ்சப் போவதில்லை; அதிமுக நெருப்பாற்றில் நீந்தி மக்களுக்காக செயல்பட்டு வருகிறது" என்றார்.