திடீர் ட்விஸ்ட்! டெல்லிக்கு செல்லும் செங்கோட்டையன்! நாளை செய்தியாளர்களை சந்திக்கப்போவதில்லை என விளக்கம்

 
பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

மனம் சரியில்லாததால் ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்யப் போவதாக, தனது டெல்லி பயணம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

 ‘நாங்கள் பிரியவில்லை; ஒன்றாக இணைந்தே இருக்கிறோம்’  - செங்கோட்டையன் பேச்சு..

அதிமுகவை வலுப்படுத்த கட்சியை ஒன்றிணைக்க  வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையன் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இதனிடையே அவரது ஆதரவாளர்களும் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். மேலும் 9 ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஏ.கே. செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக அவர் பாஜக தலைவர்களை சந்திக்கிறாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து கோவை விமான நிலையத்தில் ஏ.கே.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். 

அப்போது பேசிய அவர், “ஹரித்துவர் ராமர் கோவிலுக்கு செல்கின்றேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. மனம் சரியில்லாததால் கோயிலுக்கு செல்கிறேன். கலங்கி போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைதான்  வைத்திருக்கின்றீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள். கோவிலுக்கு போய்விட்டு வந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்து யாரும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் கருத்து நான் பதில் சொல்ல முடியாது. நல்லதுக்கு நாம்  சொல்கின்றோம். பல்வேறு முடிவுகளை பொதுச் செயலாளர் எடுத்து இருக்கின்றார். அவர் முடிவுக்கு கருத்துக்கள் சொல்ல முடியாது. காலம் தான் பதில் சொல்லும். இரண்டு நாட்களாக வீட்டில் இருக்கிறேன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சந்தித்திருக்கின்றனர். ஓபிஎஸ் தன்னை சந்திக்க வருவதாக ஒரு ரூமர் வந்தது. அதுவும் உண்மையில்லை. நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை. நேற்று வழக்கம் போல நான்கு திருமணங்கள், மருத்துவமனை திறப்பு விழா என வழக்கமான பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராமர் கடவுள் தானே அதனால் அவரை பார்க்க போகிறேன். இங்கு இருந்தால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள் அமைதியாக வழிபட செல்கிறேன் . ராமரை மட்டும்தான் சந்திக்க செல்கிறேன், ராமாயணத்தில் இருக்கும் ராமர், கம்பராமாயணத்தில் இருக்கும் அந்த ராமரை சந்திக்க போகிறேன்” என்றார்.