“அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள்”- செங்கோட்டையன்

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அதிமுக முன்னாள் ஏ.கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

செங்கோட்டையன்
 
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், அக்கட்சியின்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். மேலும் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். மேலும் இன்னும் ஒரு நாளில் ஏ.கே.செங்கோட்டையன் விடுத்த கெடு முடிய உள்ள நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பிச் சென்றார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.செங்கோட்டையன்ம் “உறவினர் இல்ல  திருமண விழாவிற்காக சென்னை செல்கிறேன். கெடு முடிய போகிறது,எல்லாம் நன்மைக்கே.  என்னை பொருத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை  புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. மீண்டும் டெல்லி செல்வேனா என்பதை காலம் பதில் சொல்லும். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்றார்.