பன்னீர்செல்வத்தை சந்திக்கவே இல்லை - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிச்சாமி கருத்தை அவரிடமே கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னைசெல்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி என்னுடைய எந்த கருத்திற்கும் கருத்து தெரிவிப்பது இல்லை. அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது இல்லையே. என்னுடைய கருத்தை மட்டும் தான் என்னிடம் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி கருத்தை அவரிடமே கேளுங்கள். என்னை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தை நான் பார்க்கவில்லை” என்றார்.
ஒருங்கிணைப்பு பணி எப்படி நடைபெறுகிறது என்ற கேள்விக்கு, ஒருங்கிணைப்பு பணி எப்படி நடைபெறுகிறது என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என்று கூறிச்சென்றார்.


