செங்கோட்டையன் முடிவிற்காக காத்திருக்கும் தவெக!
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையன் தரப்பிலும் தமிழக வெற்றி கழகம் தரப்பிலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. செங்கோட்டையன் முடிவிற்காக தவெக காத்திருப்பதாகவும், அவர் எந்த நேரம் என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தேவர் ஜெயந்தி அன்று ஓபிஎஸ் உடன் ஒன்றாக பயணித்ததும் அவருடன் தான் செங்கோட்டையன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதும் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது.


