கால்வாய்க்கு திரைச்சீலை.. ஃபுல் மேக்-அப்பில் போட்டோஷூட்.. முதல்வர் வெட்கப்படனும் - அதிமுக கடும் தாக்கு..

 
 கால்வாய்க்கு திரைச்சீலை.. ஃபுல் மேக்-அப்பில் போட்டோஷூட்..  முதல்வர் வெட்கப்படனும் - அதிமுக கடும் தாக்கு..   கால்வாய்க்கு திரைச்சீலை.. ஃபுல் மேக்-அப்பில் போட்டோஷூட்..  முதல்வர் வெட்கப்படனும் - அதிமுக கடும் தாக்கு.. 

பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைத்தது வெட்கக்கேடான செயல் என அதிமுக விமர்சித்துள்ளது. 

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம்  வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை! 

 கால்வாய்க்கு திரைச்சீலை.. ஃபுல் மேக்-அப்பில் போட்டோஷூட்..  முதல்வர் வெட்கப்படனும் - அதிமுக கடும் தாக்கு.. 

நீங்கள் வாக்குறுதி அளித்த
வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?
போட்டித் தேர்வுகள் மையம் எங்கே?
தொழில் வழித் தடம் எங்கே?
வர்த்தக மையம் எங்கே?
மதுரை மெட்ரோ எங்கே?

மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா ?

` கால்வாய்க்கு திரைச்சீலை.. ஃபுல் மேக்-அப்பில் போட்டோஷூட்..  முதல்வர் வெட்கப்படனும் - அதிமுக கடும் தாக்கு.. 

உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது?

பந்தல்குடி கால்வாயை திரை போட்டு மறைத்ததே வெட்கக்கேடான செயல். அதை விட, Damage Control என்ற பெயரில் பொம்மை முதல்வர் கையை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வேடிக்கையின் உச்சம். போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா மு.க.ஸ்டாலின்? 

இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூச்சப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரா? போட்டோ ஷூட் என்றால் Full Make-up உடன் வந்திடுவார்.” என்று குறிப்பிட்டுள்ளது.