பாஜக வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு - ஓபிஎஸ் ட்வீட்!!

 
ops

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. பாஜக சார்பில் வேட்பாளராக ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு கோரி, அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசியதாக அறிவிக்கப்பட்டது.  இதன் காரணமாக இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்று ஈபிஎஸ் நேற்று அறிவித்தார்.
rn
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திரு.ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திரு.ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக டெல்லியில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சியின்  துணை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ராஜஸ்தானில் பிறந்த இவர் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றியுள்ளார்.   ராஜஸ்தானில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் , மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் . கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பரவலாக அறியப்பட்டவர். இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார்.