2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்- விஜயபாஸ்கர்
அரசியலில் தடம் மாறக்கூடாது தடுமாறக்கூடாது, அப்படி தடுமாறி தடம் மாறியவர்கள் இப்போது இல்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் மாங்காடு அடுத்த கோரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் கந்தன் தலைமையில் நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதை எடுத்து அவர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், “கொடுக்கும் கட்சி கொடுக்கின்ற கட்சி அதிமுக, கெடுத்த கட்சி திமுக. சத்துணவு திட்டம் தந்தவர் எம்ஜிஆர், இன்றும் 100 யூனிட் மின்சாரம் உள்ளது, திட்டங்களை தந்தவர்கள் இல்லை ஆனால் அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் உள்ளன.
கொடி பிடித்து கோசம் போட்டவன் எல்லாம் கோட்டை பிடித்து விட்டார்களா? ஆனால் அதிமுக பிடித்தது. அமெரிக்காவில் படுத்து கொண்டு வெற்றி பெற்றார் எம்ஜிஆர். அரசியலில் பொறுமை, சகிப்பு தன்மை வேண்டும். அரசியலில் தடம் மாற கூடாது தடுமாற கூடாது, தடம் மாறியவர்கள். தடுமாறியவர்கள் இப்போது இல்லை. 2026- ல் அதிமுக கப்பல் கோட்டை என்ற கரை சேரும். 2026 இல் அம்மா ஆட்சி உறுதி எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்” என்றார்.