பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்: பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்!

 
1 1

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

பெட்ரோல் கலப்படம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், பாட்டிலில் பெட்ரோல் பிடித்துப் பார்த்தபோது தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என பணியாளர்களை எச்சரித்த போலீசார், நிலையத்தின் குறுக்கே கயிறு கட்டினர்.மேலும் வாகன பழுதுகளை சரிசெய்து தருவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.