சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது திடீரென விழுந்த ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ விளம்பர பதாகை
கடலூர் லாரன்ஸ் சாலை சிக்னல் அருகே விளம்பர பதாகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் காயமடைந்தார்.
கடலூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் லாரன்ஸ் சாலை நான்கு மணி சந்திப்பில் சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் கட்டையில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்ட நிலையில், அந்த விளம்பர பதாகை சேதம் அடைந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் புதுகுப்பத்தைச் சேர்ந்த தணிகைச் செல்வன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விளம்பர பதாகை அறுந்து விழுந்து புருவம் மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
கடலூரில் விளம்பர பேனர் விழுந்து விபத்து - வாகன ஓட்டி காயம்... pic.twitter.com/kQsQ2QEb9J
— Sunil (@TweetsOfSunil) November 19, 2024
தற்போது சிக்னலில் இருந்து விளம்பர பதாகை இருசக்கர வாகன ஓட்டி மீது விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கடலூர் நகரில் பல விளம்பரப் பதாகைகள் அருந்து விழும் அளவிற்கு இருப்பதால் அதிகாரிகள் அவற்றை சரி செய்தோ அல்லது கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது. சிக்னல் நேரத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.