பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் : தலைமைச்செயலாளர் ஆலோசனை!!

 
iraianbu

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது . தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.  தடை விதிக்க கோரியும் பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

ttn

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதிக்கக்கூடாது.  முதியவர்கள், குழந்தைகளின் சுகாதார நலனை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.  அதே நேரம் பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் பட்டாசு வெடிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

iraianbu

இந்நிலையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் பொதுத்துறைச்செயலாளர் ஜெகந்நாதன், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.