கூட்டம் முடிந்த பின் சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்- தவெகவினருக்கு உத்தரவு
Dec 14, 2025, 17:10 IST1765712440429
இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் சுகுமார், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தை பயன்படுத்த 5- நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளார்.

* 50 ஆயிரம் ரூபாய் வாடகையும் , டெபாசிட்டாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
* ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்த காவல்துறையினர் இடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
* கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
* கூட்டம் முடிந்த பின்பு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை சொந்த செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
* இதன் பிறகு இந்த இடத்திற்கு எந்தவித உரிமையும் கோரக்கூடாது.. என 5- நிபந்தனைகளுடன் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.


