மீண்டும் தாம்பரத்தில் தண்டவாள மேம்பாட்டு பணி- 23 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

 
train

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் 23 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

train

கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையம் இடையே 3, 5, 7ம் தேதிகளில் இரவு 10:30 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்

★ கடற்கரை– தாம்பரம் இரவு 9:10, 9:30 மணி ரயில்கள் செப்.5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கடற்கரை – தாம்பரம் அதிகாலை 4:15 மணி ரயில் செப். 4, 6ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கடற்கரை – தாம்பரம் அதிகாலை 4:15 மணி ரயில் செப். 8ம் தேதி ரத்து செய்யப்படுகிறது

★ தாம்பரம் – கடற்கரை இரவு 10:40, 11:20, 11:40 மணி ரயில்கள் செப். 5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ திருவள்ளூர் – கடற்கரை இரவு 9:35 மணி ரயில் செப். 5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கடற்கரை – திருவள்ளூர் இரவு 7:50 மணி ரயில் செப். 5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கடற்கரை – அரக்கோணம் அதிகாலை 4:05 மணி ரயில் இன்றும், செப். 6, 8ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கும்மிடிப்பூண்டி – கடற்கரை இரவு 9:55 மணி ரயில் செப்.5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

★ கடற்கரை – கும்மிடிப்பூண்டி இரவு 10:45 மணி ரயில் செப். 5, 7ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

tambaram railway station works

ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்


★ கடற்கரை - செங்கல்பட்டு இரவு 10:40 மணி ரயில் செப். 5, 7ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து செல்லும்

★ கடற்கரை - தாம்பரம் இரவு 11:05, 11:30, 11:59 மணி ரயில்கள் செப். 5, 7ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்

★ கடற்கரை – செங்கல்பட்டு அதிகாலை 3:55 மணி ரயில் இன்று, செப்.6, 8ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து செல்லும்

★ செங்கல்பட்டு - கடற்கரை இரவு 8:45, 9:10, 10:10, 11:00 மணி ரயில்கள் வரும் 5, 7ம் தேதிகளில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்

★ திருமால்பூர் - கடற்கரை இரவு 9:00 மணி ரயில் செப். 5, 7ம் தேதிகளில் எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும்