"விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு ; முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா"!!

 
tn

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முழு நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து  வருகிறார். 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு,30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
 

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :-

*முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும்

*வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

*மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்த ரூ.71கோடி நிதி ஒதுக்கீடு 

*நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

*ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது

tn

*19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்

*செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்

*விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு

*சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்

tn

*வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை 

*விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை

*விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை 

*பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்; இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

*விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு

tn

*திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை

*விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் ; நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

*விவசாயிகள் இடுபொருட்களை பெரும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை

*உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை,  விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை

farmers

*தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்

*சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும் வகையில் 7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி 

*இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க, வேளாண் & தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்