ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா - அதிமுக அதிரடி அறிவிப்பு

 
admk office

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நினைவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான அரிய வண்ண புகைப்படங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை அனுப்பி வைக்க அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியாரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி V.N. ஜானகி அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், 24.11.2024 ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற உள்ளதையொட்டி, நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.


திருமதி ஜானகி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை அலங்கரிக்கும் வகையில், கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் திருமதி ஜானகி அம்மையார் அவர்களின் நினைவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான அரிய வண்ண புகைப்படங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்,  முகவரிக்கு தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம். அல்லது நேரடியாக தலைமைக் கழகத்திற்கு வந்தும் சமர்ப்பிக்கலாம். தாங்கள் அனுப்பி வைக்கும்
விபரங்கள் 18.11.2024-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு கிடைக்கச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.