அதிமுக பொதுக்குழு வழக்கு - விசாரணை ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பு

 
admk sc

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் கடந்த மாதம் 05ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோரின் அமர்வில் இன்று மேல்முறயீட்டு மனு விசாரணைக்கு வந்தது. 

Ops

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடிதம் வழங்கிய நிலையில் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. பிற வழக்குகளை தாமதிக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்வதாக பதிவாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.