கள்ளக்குறிச்சியில் ஈபிஎஸ் கண் முன்னே நிர்வாகியின் கன்னத்தில் அறைந்த அதிமுக நகர செயலாளர்

 
ச் ச்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை அதிமுக நகர செயலாளர் பாபு கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் புறவழிச்சாலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 108 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுகவின் கொடியினை ஏற்றி வைக்க எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் நின்றிருந்த கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு தனது அருகில் இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.