ஆவடி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் தகராறு - அதிமுக கண்டனம்!

 
admk office

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் காயமடைந்த நிலையில், திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் கண்மூடித்தனமாக தாக்கியதில் ஒருவர் ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி என செய்திகள் வருகின்றன. எது நடக்கக் கூடாது என்று மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விடியா திமுக அரசை எச்சரித்தார்களோ, அது நடக்கிறது.

போதைப்பொருளால் இளைஞர்கள் சமநிலை இழப்பதும், குற்றங்கள் புரிவதும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், சட்டம் ஒழுங்கு கெடுவதும் என இவை அனைத்துக்கும் நிர்வாகத் திறனற்ற திரு.@mkstalin-ன் திமுக அரசே காரணம். அஇஅதிமுக மீது பொய்யும் அவதூறும் பரப்பும் நேரத்தில், உங்கள் ஆட்சியின் அவல நிலையை கொஞ்சமாவது கவனியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.