சசிகலா சுற்றுப்பயணம் எதிரொலி- அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 17 அன்று நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். அந்த வகையில் வரும் 17 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் மொஹரம் மற்றும் ஆடி 1 காரணத்தால் 17ஆம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நாளில் தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.