எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு கட்டுப்படாத அதிமுகவினர்

 
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு கட்டுப்படாத அதிமுகவினர்

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் படத்துடன் அதிமுகவினர் பேனர் அடித்த சம்பவம் பேசும்பொருளாக மாறியுள்ளது.

Image

RSS பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் வகித்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பதவியைப் பறித்தால் கவலை இல்லை என தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்து இருந்தார். 

Image

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு கட்டுப்படாமல் தளவாய் சுந்தரத்தின் பெயருக்கு பின்னால் கட்சி பொறுப்புகளை அச்சிட்டு ஆயுதபூஜை போஸ்டரை குமரி மாவட்ட அடதமுகவினர் அடித்துள்ளனர். தளவாய் சுந்தரம் அவர்கள் ஆர் எஸ் எஸ் பேரணியை தொடக்கி வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி. பின் மக்கள் மத்தியில் இவ்விஷயம் ஓரளவுக்கு ஓய்ந்த பிறகு மீண்டும் விடுவித்த பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.