அதிமுக நிர்வாகி படுகொலை விவகாரம் - 5 தனிப்படைகள் அமைப்பு
Jul 4, 2024, 12:43 IST1720077216932
சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம் நேற்று இரவு கொலை செய்யப்பட்ட நிலையில், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை நிறைவுபெற்றும் உடலைப் பெற குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.


