இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக நிர்வாகி விலகல்
Apr 17, 2025, 16:28 IST1744887490977
நாகை மாவட்டம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கடிதம் எழுதியுள்ளார். இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் எழுதியுள்ள கடிதத்தில், “சிறுபான்மை சமூகமாகிய இஸ்லாமியர்களை பழிவாங்கி கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. வோடு கூட்டணி அமைத்துள்ள அதிமுகவில் 53 ஆண்டுகால கழகப் பணியில் இருந்தும் கட்சி எனக்கு வழங்கிய கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கணத்த இதயத்தோடு இன்றைய தேதியில் இருந்து விலகி கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


