அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!
Dec 26, 2025, 12:21 IST1766731860817
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டனர். தற்போது அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து, இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.


