செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

 
senthil balaji

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவரை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னதாக, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடதக்கது.