"பொதுச்செயலாளர் என கல்வெட்டு" - எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியேற்றினார் சசிகலா

 
asaa


எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை அதிமுக 49 ஆண்டுகளாக, இயங்கி வரும் நிலையில் இன்று 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் அதிமுக சார்பில் பொன்விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

sasi

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு சசிகலா சென்ற நிலையில்,  அதிமுகவின் கொடியை ஏற்றிய பிறகு கல்வெட்டை திறந்து வைத்தார். எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதை  பின்னர் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்திற்கு செல்கிறார்.

ttn

நேற்று ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கு மலர் வளையம் வைத்து கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,நான் ஏன் தாமதமாக இங்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதாவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்.  தொண்டர்களையும் கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்றார்.