#ADMK திருச்சியில் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
Mar 18, 2024, 19:02 IST1710768736012
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் ஆகிய அதிமுக சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் 24ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் துவங்க உள்ளார்.
மார்ச் 24 ஆம் தேதி துவங்கும் முதல் கட்ட பிரச்சாரம் மார்ச் மாதம் 31ஆம் தேதி நாகப்பட்டினத்தில் முடிவடைகிறது.
இது குறித்த சுற்றுப்பயண விபரங்களை அஇஅதிமுக தலைமை கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் - முதல் கட்டம்
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) March 18, 2024
24.03.2024 முதல் 31.03.2024 வரை. pic.twitter.com/YODDoZRfdO