அடுத்து வரும் தேர்தலுக்கு மதுரை மாநாடு அடித்தளமாக அமையும் - ஈபிஎஸ்

 
ep

அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அமையும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

th

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியுள்ளது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அத்துடன் மதுரையில் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம்  தேதி  நடைபெற உள்ள மாநில இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.


இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை; தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக; ஒன்றரை மாத காலத்தில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் .அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்தனர்.  அதிமுகவை உடைக்கவும் , முடக்கமும்  சிலர் கண்ட கனவு தற்போது உடைந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

tn
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அமைதியாக உள்ள மாநிலத்தை சீர்குலைக்கும் நோக்கில் டி.கே. சிவகுமார் செயல்பட்டு வருகிறா.ர் விவசாயிகளுக்கு உரிய நிறை தமிழக அரசு பெற்று தர வேண்டும் என்றார்.