சிறுமி பாலியல் வன்கொடுமை- தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

 
ச் ச்

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

திருவள்ளூரில் மாந்தோப்பில் 8 வயது குழந்தை.. அந்த நபர் ஹிந்தியில்  பேசினாராம்! கும்மிடிப்பூண்டி கொடுமை | Gummidipoondi 8 year old girl and  what happened in thiruvallur ...

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் இல்லாத மாந்தோப்பு வழியாக சென்ற போது பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் இன்று வரை, குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.