பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே குப்பையில் வீசப்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள்

 
ச் ச்

சேலம் அரிசிபாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகர் அரிசிப்பாளையம் பகுதியில் சத்திரம் மேம்பாலம் அருகே இன்று காலையில் ஏராளமான அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் கொட்டி கிடந்தன.எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவினர் தங்களது உறுப்பினர் அட்டைகளை சாலையில் பேசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர் இந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை சாலையில் வீசி சென்று உள்ளனர். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி, அதிமுகவில் அமித்ஷா தலையீடு போன்ற நடவடிக்கையின் காரணமாக அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்  கட்சியின் தலைமையை பிடிக்காமல் , அதிமுக உண்மை தொண்டர்கள் ,  கோபத்தில் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.