சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

 
assembly assembly

ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தொடரில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில்  தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த10 சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. 

eps

இந்த நிலையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தொடரில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் செய்யாறு விவசாயிகள் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது  நேரலையில் தடங்கல் 
செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநட்டப்பு செய்தனர்.