அதிமுக ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு!!

 
ops

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அவருக்கு பாதகமான முடிவே காத்திருந்தது. இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்தை எடப்பாடி பழனிசாமி பெறார்.  

ops

 எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்து வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். இதையடுத்து அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த அவர், இருவரும் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார்.இந்நிலையில் தஞ்சாவூரில் நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர். 

tn
திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம் , "அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை அனைவரின் எண்ணமாக உள்ளன.  அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும். அதிமுகவை எதிர்க்கும் தகுதி யாருக்கும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது" என்றார்.