“சூடு, சொரணை இருந்தால்”- செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர்
தவெகவில் இணைந்த செங்கோட்டையனை கண்டித்து மானாமதுரையில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை செங்கோட்டையன் பயன்படுத்த கூடாது என அதிமுகவினர் எச்சரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடி பிடித்ததையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பிரச்சார பயண சாரதி என குறிப்பிடப்படும் செங்கோட்டையன் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருப்பதுடன் தனது அலுவலக பெயர் பலகையிலும் வைத்துள்ளார். இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். அதிமுகவே வேண்டாம் என்ற பிறகு ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களை சூடு சொரணை இருந்தால் பயன்படுத்த கூடாது என எச்சரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளரான மணிமாறன் என்பவர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்


