தொடங்கியது பேரணி....சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

 
EPS

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.  இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி  தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட புகார்களை  வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று ஆளுநரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவர் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி தொடங்கி நடைபெற்று வருகிது.  பேரணி கவர்னர் மாளிகையை சென்றடைந்ததும் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார்.