மாமன்னர் மருதுபாண்டியரின் 222வது நினைவு தினம் - அதிமுக சார்பில் மரியாதை

 
admk office admk office

மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 222வது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி, அவரது திருஉருவ சிலைக்கு வருகிற 24ம் தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 222-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி 24.10.2023 - செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. PR. செந்தில்நாதன், M.L.A., அவர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.