சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு..

 
எஸ்பி வேலுமணி

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியுள்ளார்.  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஒதுக்க வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் உட்கட்சி பூசல்  நிலைவிவரக்கூடிய சூழலில் நேற்றைய தினம், இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருக்கிறது.  இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு  பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம்  அதிமுக தரப்பில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை  விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.   தங்களது ஆதரவாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது..

 சபாநாயகர் அப்பாவு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தினால் அவர்களது கோரிக்கை குறித்து பரிசலீக்கப்படாமல் இருப்பதாக சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் நிலையில்,  எதிர்க்கட்சி  துணைத் தலைவர் இருக்கையே ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என சபாநாயகரை சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.  சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பாக காலை 9.30 மணிக்கே சபாநாயகர் அப்பாவு அறையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  அதிமுக கொறடா , சபாநாயகரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.