‘அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்..’ தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?? - இபிஎஸ் விளக்கம்..!

 
ep ep

2026ல் அதிமுக  தனித்து ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  விஜய் உடன் கூட்டணி வைப்பீர்களா என்கிற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார்.  

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து  வருகிறார்.  அந்தவகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சென்றுள்ள அவர் அதிமுக தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து வருகிறார்.  

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  2026ல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்கிற கேள்விக்கு, “ யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும் அதிமுக அரிதி பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் அவருக்கு கூறினார்.

eps annamalai

 2024 மக்களவைத் தேர்தலின் போது ஏன் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், "அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல்  உக்திகள்  வகுக்கப்படுகின்றன.  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவை வீழ்த்த வேண்டும் எனவே மொத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைப்பது அவசியம் ஆகிவிட்டது . ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது இதுபோன்ற சூழல் ஏற்படவில்லை ”என்று தெரித்தார்.  

பாஜக - தவெக இதில் எது வலுவான கூட்டணி என்கிற வினாவுக்கு, “பாஜக ஒரு தேசிய கட்சி. அது பல மாநிலங்களை ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சொந்த பலம் உள்ளது. ஆகையால் பாஜகவையும் தவெகவையும் ஒப்பிட முடியாது.  மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் ” அவ்வலவுதான் என்றார். 

2026 தேர்தலுக்காக அதிமுக,   நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான  விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததா?  என்கிற கேள்விக்கு, “திமுக அரசை வீழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை நாங்கள் வரவேற்கிறோம். அதில் என்ன தவறு?” என்று பதில் அளித்தார். 

அதிமுக- பாஜக கூட்டணிக்காக அண்ணாமலை அதன் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்கிற கேள்விக்கு, “ மாற்று கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடுவதில்லை” என்றார்.  

vijay

சட்டம் ஒழுங்கு குறித்து கருத்து தெரிவிக்க அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்து வருகிறாரே? எனும் கேள்விக்கு, “கருணாநிதியின் மகன் என்கிற ஒரே தகுதியுடன் முதலமைச்சர் ஆகி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஸ்டாலினை விட,  மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவுக்கு அதிக உரிமை உண்டு.  திறமையற்ற திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மௌனமாக இருப்பதற்கு நாம் கூட்டாளிகளா?

ஒரு ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் யாரையும் கேள்வி கேட்க உரிமை உண்டு.  ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க் கட்சி தலைவருக்கும் அந்த உரிமை இருப்பதாக தெரியவில்லை.  இதுதான் ஜனநாயகம் பற்றிய ஸ்டாலின் புரிதல்” என்று கூறினார். 

தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதா என்கிற கேள்விக்கு, தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது” என்றார் மேலும்,  விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடன் ஆன கூட்டணியை முறித்துதுவிட்டு தவெகவுடன்  கூட்டணி வைப்பீர்களா என்கிற கேள்விக்கு, “ யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது ” என்று பதில் தெரிவித்தார்.