50 லட்சம் பயணிகளுக்கு கட்டண சலுகை - விமான நிறுவனங்கள் அறிவிப்பு..!!
சுதந்திர தின விழாவையொட்டி ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், 50 லட்சம் பயணிகளுக்கு கட்டண சலுகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகள் அனைவருக்கும் தள்ளுபடி சலுகை விமான கட்டணங்களை அறிவித்துள்ளது. அதன்படி நாளை திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11 முதல், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, நள்ளிரவு 11.59 மணி வரையில், இணையதளம், செல்போன் ஆப்,டிக்கெட் கவுண்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.5 மில்லியன் பயணிகளுக்கு, இந்த சலுகைகள் கிடைக்கும்.
அதன்படி உள்நாட்டு விமான பயணங்களுக்கான கட்டணம் ரூ.1,279 முதல் தொடங்குகிறது. அதைப்போல் வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமான பயணிகள் காண கட்டணம் ரூ.4,279 முதல் தொடங்குகிறது. அதைப்போல் பயணிகள், தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த சலுகை விமான டிக்கெட்டுகளை, அடுத்த ஆண்டு, 2026 மார்ச் 31ஆம் தேதி வரையில், எப்போது வேண்டுமென்றாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் ஓணம், துர்கா பூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை போன்ற முக்கிய விசேஷ நாட்கள் ஆன, திருவிழாக்கள் வருவதால், அந்த நேரத்தில் இந்த சலுகை கட்டண விமான டிக்கெட்களை பயன்படுத்தி, பயணிகள் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் போன்றவைகளுக்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விமான டிக்கெட்களைwww.airindiaexpress.com என்ற இணையதளத்திலும், Air India express mobile app மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப் மூலம் ஆகஸ்ட் பத்து முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஆகஸ்ட் 11 முதல் 15 வரையில், அனைத்து விதமான டிக்கெட் கவுண்டர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் இந்த சலுகை கட்டண டிக்கெட் விலை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


