கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் - சென்னை விமான நிலையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு மூடல்

 
airport airport

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது. 

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் இன்று (04-12-2023) 0230 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. 

tn

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு சூழ்ந்துள்ளது. விமான ஓடுதளத்தில் மழைநீர் அதிகளவில் சூழ்ந்துள்ள நிலையில், விமான சேவை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களூக்கு புறப்படும் விமானங்களும், சென்னைக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.