#BREAKING ராமநாதபுரத்தில் விமான நிலையம் - இடங்கள் தேர்வு
Sep 1, 2025, 12:55 IST1756711519104
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். இதனையடுத்து ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க `கீழக்கரை, உச்சிப்புளி' ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவித்துள்ளது.


