உங்களைக் காப்பாற்ற வருகிறது ஏர்டெல் 'AI' - இனி மோசடிக்கு நோ சான்ஸ்..!

 
1 1

நீங்கள் ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மொபைலுக்கு ரகசிய ஓடிபி எண் வந்தால், இந்த ஏஐ தொழில்நுட்பம் உடனடியாக உங்களை எச்சரிக்கும். டெலிவரி அல்லது வங்கிச்சேவை என்ற பெயரில் மோசடி நபர்கள் உங்களை ஏமாற்றி ஓடிபியை பெறுவதை இது முன்கூட்டியே தடுத்துவிடும்.

பயனர்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஏர்டெல் எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் மிகவும் அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.